திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் ஈச்சனாரி, மதுக்கரையில் பிரசாரம்

கோவை, ஏப். 1:  கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் நேற்று ஈச்சனாரி மற்றும் மதுக்கரை பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘திமுக ஆட்சி அமைந்ததும் கிணத்துக்கடவு தொகுதியில் பல வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படும். 100 நாட்களில் குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’’ என்றார்.கோவை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜ சோழன் தலைமையில் வெள்ளலூர் வார சந்தை மற்றும் சொரூபராணி மைதானம் பகுதியில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில், முருகேசன், ராஜேந்திரன் மற்றும் செட்டிபாளையம் கார்த்தி, ராஜ்குமார், ஆனந்த்குமார், இளங்கோ, சிவா, செந்தில் உள்பட 50 மேற்பட்டஇளைஞர்கள் பங்கேற்று அந்தப் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வேட்பாளர் குறிச்சி பிரபாகரனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் போது கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, ஒன்றிய செயலாளர் ஈ.பி.ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: