×

கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்தில் குளித்தலை திமுக வேட்பாளர் மாணிக்கம் 75 இடங்களில் வாக்கு சேகரிப்பு

குளித்தலை, ஏப். 1: கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சிந்தலவாடி கள்ளபள்ளி பிள்ளா பாளையம் கருப்பத்தூர் வீரியம் பாளையம் ஊராட்சிகளில் நந்தன் கோட்டை, சிந்தலவாடி, மேல சிந்தலவாடி, குள்ளநரி மேடு,விட்டுகட்டி, லாலாபேட்டை கடைவீதி, கொடிக்கால் தெரு, கள்ளபள்ளி ,கருப்பத்தூர்,ஆதிதிராவிடர் தெரு, குடித்தெரு, பிள்ளா பாளையம், வல்லம், கொம்பாடிபட்டி, மத்திப்பட்டி, பாலப்பட்டி, அரபுலிப்பட்டி, கணக்கம்பட்டி, அந்தரப்பட்டி, புனவாசிபட்டி,

ஊத்துப்பட்டி வரகூர் மேட்டுப்பட்டி வேங்காம்பட்டி தாளியாம்பட்டி கே புதுப்பட்டி, வீரகுமரன் பட்டி உள்ளிட்ட 75 இடங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது கிராமபகுதிகளில் பெண்கள் ஆரத்தி எடுத்து மலர்மாலை சூடி வாணவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.வேட்பாளருடன் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, ஒன்றிய செயலாளர் உமாபதி, மாவட்ட பிரதிநிதி மெடிக்கல் மாணிக்கம், ஜபருல்லா,ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Krishnarayanapuram ,East Union Kulithalai DMK ,Manikkam ,
× RELATED வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு