தேர்தல் தினமான ஏப்.6ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநர்அறிவிப்பு

திருச்சி, ஏப். 1: திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு 6ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தினத்தில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் கட்டடம் மற்றும் கட்டுமான பணியிடங்களில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள்,

தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் இதர அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் 6ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அனைத்து தொழிற்சாலை மற்றும் கட்டுமான நிர்வாகங்களுக்கு இதன் மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் விடுமுறை வழங்காதது தொடர்பாக எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>