×

அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம் விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

க.பரமத்தி, ஏப்.1: க.பரமத்தி அடுத்த தென்னிலை அருகேயுள்ள பேரக்கம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கமுத்து மனைவி லட்சுமி (75) இவர் கடந்த வாரம் அதே பகுதியில் நடந்து சென்ற போது பின்னால் வந்த நான்கு சக்கர வாகனம் மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இவரை அருகிலிருந்த உறவினர்கள் உடனே கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைகாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Minister ,Vijayabaskar ,
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...