×

பாலைவனம் போல் காட்சியளிக்கும் காவிரிஆறு கரூர் அருகே ஈரோடு- கோவை ரோடு சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்

கரூர், ஏப். 1:கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். கடந்த 15ம்தேதி அன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்த அவர், தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், நேற்று கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்திபுரம், பழனியப்பா தெரு, 80 அடி ரோடு, செங்குந்தபுரம் கிராஸ் பகுதிகள், காமாட்சியம்மன் கோயில் வடக்குத்தெரு, அன்னை இந்திரா சாலை, சாமிநாதபுரம், 50 அடி ரோடு, உழவர் சந்தை ஈவெரா சாலை, படிக்கட்டுத்துறை போன்ற 30க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு காலை 7மணி முதல் மதியம் 2மணி வரை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, திருமாநிலையூர் நடுத்தெரு, அக்ரஹாரம், காமராஜ் தெரு, தாந்தோணி முதல் கிழக்கு தெரு, சுங்ககேட் தாந்தோணி குடித்தெரு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் இரவு 9.30மணி வரை வீடு வீடாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் மக்கள் மத்தியில் வாக்குகள் கேட்டுபேசியதாவது:ஈரோடு கோவை ரோடு சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளது.அரசு காலனி முதல் வாங்கல் மோகனூர் பாலம் வரை சென்டர் மீடியன் அமைத்து உயர்மின் விளக்குகள் அமைத்து தரப்படும். என்றார்.

Tags : Erode-Coimbatore road ,Cauvery River Karur ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு