×

பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 362 நுண்பார்வையாளா–்கள் நியமனம்

ஈரோடு, ஏப். 1:  பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 362 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.  சட்டமன்ற தோ்தல் நுண்பார்வையாளா–்களாக நியமிக்கப்பட்டுள்ள வங்கி மற்றும் மத்திய அரசு பணியாளா–்கள் வாக்குப்பதிவின்போது, கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்த பயிற்சி கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் கதிரவன் பேசியதாவது: சட்டமன்ற தோ்தலில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும், பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு, தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 362 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. பதட்ட வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 362 தோ்தல் நுண்பார்வையாளாகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு நாளின் போது, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, மாதிரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டதா, மாதிரி வாக்கெடுப்பு முடிவு அழிக்கப்பட்டதா, மாதிரி வாக்கெடுப்பின் நேரம், வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரம் ஆகியவற்றை பொருத்துதல், வாக்குப்பதிவு தொடங்கும் நேரம், வாக்குப்பதிவு முடியும் நேரம், வாக்குப்பதிவின் சதவீதம், முகவர்களுக்கான நுழைவு சீட்டு முறை பின்பற்றுதல் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.    மேலும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு வழிமுறைகளான சமூக இடைவெளியை கடைபிடித்தல், ஒவ்வொரு வாக்காளருக்கும் கையுறை, வாக்காளா–்கள் வாக்குச்சாவடிக்கு நுழையும் பொழுதும் மற்றும் வெளியேறும் பொழுதும் கிருமிநாசினி வழங்குதல், ஒவ்வொரு வாக்காளரையும் உடல் வெப்பநிலை அறியும் தொ்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்தல் உள்ளிட்ட பணிகளையும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கதிரவன் பேசினார்.

Tags :
× RELATED 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில்...