ராஜபாளையம் தொகுதியில் திமுக ஆட்சி அமைந்ததும் அரசு கல்லூரி அமைக்கப்படும்

ராஜபாளையம், ஏப். 1: திமுக ஆட்சி அமைந்ததும் ராஜபாளையம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழில் பூங்கா ஏற்படுத்தப்படும் என திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் எம்எல்ஏ வாக்குறுதியளித்துள்ளார். ராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் எம்எல்ஏ கூட்டணி கட்சி தலைவர்களுடன் மீனாட்சி தியேட்டர் ரோடு, பூபால்பட்டி தெரு மற்றும் அம்பலபுளி பஜார், நான்கு முக்கு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதே, ராஜபாளையம் நகருக்கு மூன்று முத்தான திட்டங்கள் கொண்டு வந்தோம். மேலும் ராஜபாளையம் அரசு பொதுமருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் கொண்டு வந்துள்ளோம். திமுக ஆட்சி அமைந்தவுடன் இப்பகுதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் இணைப்புச் சாலைகள் அமைக்கப்படும். ராஜபாளையம் அரசு மருத்துவமனையை எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியுடன் ஹை-டெக் மருத்துவமனையாக தரம் உயர்த்துவோம் என பேசினார்.பிரசாரத்தில் மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் ஷியாம்ராஜா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட கவுன்சிலர் முத்துசெல்வி, வார்டு செயலாளர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>