7 தொகுதிகளில் 1,439 பேரின் தபால் ஓட்டுகள் ஒப்படைப்பு

விருதுநகர், ஏப்.1: விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 சட்மன்ற தொகுதிகளில் 80 வயதிற்கு மேற்பட்ட 1,671 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 457 பேர் என 2,130 பேர் தபால் ஓட்டு விண்ணப்பம் படிவம் 12டி அளித்துள்ளனர். தபால் ஓட்டு படிவம் வழங்கியவர்களை வாக்குப்பதிவு அலுவலர்கள் குழு நேரில் சென்று தபால் ஓட்டு சீட்டுகள் அடங்கிய கவர்களை அளித்தனர்.நேற்று வரை தபால் ஓட்டு பெற்ற 80வயதிற்கு மேற்பட்டவேர் 1,122 பேரும், மாற்றுத்திறனாளிகள் 317 பேர் என 1,439 பேர் தபால் ஓட்டுகளை பதிவு செய்து வாக்குப்பதிவு அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர். பெறப்பட்ட தபால் ஓட்டுகள் அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தபால் ஓட்டு பெற்று திரும்ப அளிக்காத 691 பேரிடம் தபால் ஓட்டுகளை பெறும் நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>