×

ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்டது ஒரே நாளில் ₹3.18 கோடி அதிரடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

சென்னை, ஏப்.1: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அதிகாரிகள் விதிகளை மீறி பணம் மற்றும் பரிசு பொருட்களை எடுத்துச் செல்பவர்களை சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ேநற்று முன்தினம் இரவு நடத்தி அதிரடி வாகன சோதனையில், மயிலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஊழியர் சரவணன் எந்தவித ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ₹5 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல், தி.நகரில் இரண்டு இடங்களில் நடத்திய வாகன சோதனையில் வங்கி ஏடிஎம் மையத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ₹29 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கிண்டியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து பாண்டிபஜார் வங்கி கிளைக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ₹14.59 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தி.நகரில் இருந்து மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் வங்கிக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ₹14 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருமங்கலம் பகுதியில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ₹1.90 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், எம்.ஜி.ஆர்.நகரில் நடத்திய சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி காயத்ரி என்பவர் கொண்டு சென்ற ₹1.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சைதாப்பேட்டை பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தனியார் வங்கிக்கு சொந்தமான ₹1 கோடிய 3 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மயிலாப்பூர் பகுதியில் வங்கி ஏடிஎம் மையத்திற்கு பணம் நிறப்ப கொண்டு சென்ற ₹29 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு வங்கி அதிகாரிகள் உரிய ஆவணங்கள் தேர்தல் பறக்கும் படையினரிடம் காட்டியதால் பறிமுதல் செய்யப்பட்ட ₹29 லட்சம் பணம் விடுவிக்கப்பட்டது.

கொடுங்கையூரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கமல்ஜெயின் என்பவர் கொண்டு சென்ற ₹1.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபகுதியில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு கார்த்திகேயன் என்பவர் கொண்டு சென்ற ₹4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வடபழனியில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கிகளுக்கு பணம் கொண்டு சென்ற வாகனத்தில் இருந்து ₹90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை முழுவதும் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ₹3.18 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Election Flying Squad ,
× RELATED தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!