×

பொன்னேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தங்கபாலு பிரசாரம்

பொன்னேரி,  ஏப்.1: மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ், பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் நடந்த பிரசாரத்தில் பொன்னேரி தொகுதி வேட்பாளர் துரை சந்திரசேகரனுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து பட்டாசு வெடித்து இருபுறங்களிலும் கொடி தோரணங்கள் கட்டி உற்சாக வரவேற்பளித்தனர். சந்திரசேகருக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு பிரசாரம் செய்து பேசியது: பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு இருப்பதால் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றிபெற்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்.

6 ஆண்டுகளில் உலகத்திலேயே பின்தங்கிய நாடாக இந்தியா  மாறிவிட்டது. தமிழகத்திற்கு மு.க.ஸ்டாலின் இந்தியாவிற்கு ராகுல் காந்தியும் தான் சிறந்த தலைவர்கள். தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் சிறந்த தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார் என்று பேசினார். வேட்பாளர் சந்திரசேகர் பேசியது: என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் இந்த தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன். மீஞ்சூர் நகர பகுதிகளில் பொதுக்கழிப்பிடம் சமுதாயக் கூடம், கழிப்பிட கட்டிடம், பொதுமக்களுக்கு ஓய்வுதியம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட  பணிகளை செய்து தருவேன் என்று உறுதியளித்தார்.

இதில் முன்னாள் அமைச்சர் க. சுந்தரம், அவைத் தலைவர் பகலவன், எம்.பி. ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், ஒன்றியக்குழு தலைவர் ரவி, கவுண்டர் பாளையம் சீனிவாசன் கே.எஸ். சுப்பிரமணி, அருண்பிரசாத், ஜலந்தர், பொன்னேரி வக்கீல் கார்த்திகேயன், சந்திரசேகர், சம்பத், கோவர்த்தனன், பிரகாசம் கோவிந்தராஜ், முனுசாமி, முகமது தாரிக், துரைவேல்பாண்டியன், சித்திக் பாஷா, யுகந்தர், சிலம்பரசன், திமுக மீஞ்சூர் கோதண்டம், வல்லூர் தமிழரசன்,  கா.சு.தன்சிங். தமிழ் உதயன், மணமாறன் உதயசூரியன், சாமுவேல், சிற்றரசு, கோபால் இளங்கோ வசந்த் பூபாலன், மில்லர் திருப்பதி, கம்யூனிஸ்ட் பாலன். செங்கொடி செல்வன், ஆனந்தன், செல்வம், ரமேஷ், செந்தில், பார்த்திபன்,

முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் சிக்கந்தர்பாஷா, காஜாமைதீன், அப்துல்ரஷித், ஆபிப் முகமது சையத் அலி ஷேக் அகமது அன்சாரி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கோபி நயினார், வக்கீல்கள் நெடுஞ்செழியன், அமரகவி. சேகர், சிவராஜ், வடிவேல், அபூபக்கர், கல்லூரி மலை வாசன், ஸ்ரீதர் துரைராஜ், அசாருதீன், பாலாஜி, தணிகா, கார்த்திக், சங்கர், மாரிசன், பாஸ்கர், அசாருதீன், வக்கீல் சுரேஷ், நித்யா வல்லூர் ஏழுமலை வாசன், சேகர், மெரட்டூர் ரவி.பாலகணபதி, ரஜினிமுருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் சகாதேவன்,  ரமேஷ், ரவி, ஜமுனா, ரஜினி, சங்கீதா அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் வல்லூர் ஏழுமலைவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மீஞ்சூர் நகரத்தில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளி ஜீப்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் துரைசந்திரசேகர், பொது மக்களிடம்  கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முன்னதாக ரயில்வே கேட் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் துரை சந்திரசேகர் மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்கினார். மீஞ்சூர் காவல் நிலையம் அருகே தெற்கு ஒன்றிய திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.

Tags : Ponneri ,constituency ,Congress ,
× RELATED பொன்னேரி அருகே பேருந்தை சிறை பிடித்து பெண்கள் சாலைமறியல்