×

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் டி.தாஸை ஆதரித்து நடிகர் சாய் தீனா தீவிர பிரசாரம்

திருவள்ளூர், ஏப்.1: பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டி.தாஸை ஆதரித்து திரைப்பட நடிகர் சாய் தீனா  தீவிர பிரசாரம் செய்து யானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் டி.தாஸ் மற்றும் திரைப்பட நடிகர் சாய் தீனா ஆகியோருக்கு பொதுமக்கள் ஆளுயர ரோஜா மாலையை அணிவித்து வாழ்த்தி, உற்சாக வரவேற்பளித்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டி.தாஸ் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பிளேஸ்பாளையம் தொடங்கி அல்லிக்குழி உள்பட பல கிராமங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். சித்தம்பாக்கம் கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஒன்றுக்கூடி பூங்கொத்து கொடுத்து,

ஆளுயர மாலை அணிவித்து வெற்றிக்கிரீடம் சூட்டி மேளத்தாளத்துடனும் வானவேடிக்கையுடனும் அமோக வரவேற்பு கொடுத்தனர். திரைப்பட நடிகர் சாய்தீனா மற்றும் சிறகுகள் தருகிறோம் பறந்து செல்லுங்கள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரசாரத்தில் கலந்துக் கொண்டு யானை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் வேட்பாளர் டி.தாஸ் பேசுகையில், நான் தொகுதி முழுவதும் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்து வருகிறேன். பல கிராமங்களில் மக்கள் தரமான சாலை இல்லை, சுத்தமான குடிநீர் இல்லை, வீட்டு மணை இல்லை, சுடுகாடு இல்லை என்று தங்கள் குறைகளை  கூறுகின்றனர். நான் இந்த சட்டமன்ற தொகுதியின் உருப்பினரானால் இந்த மக்களுக்கு உழைக்கின்ற ஒரு வேலைக்காரனாக இருப்பேன்,  

அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறை படுத்துவேன், திருவள்ளூர் பேருந்து நிலையம் புதியதாக பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறுமின்றி கட்டிதருவேன், திருவள்ளூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்வேன். இவ்வாறு வேட்பாளர் டி.தாஸ் கூறினார். இந்த பிரசாரத்தில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எஸ்.சந்திரசேகர், மாவட்ட பொதுச்செயலாளர் பகுஜன் பிரேம், மாவட்ட  பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் பிரபாகரன், புரட்சி பாலா, பிவிஎப்.ஆனந்த, ராக்கெட் ராஜேஷ், நெமிலி அகரம் குரு, சித்தம்பாக்கம் சைமன்,  ராஜேஷ், லோகேஷ், வழக்கறிஞர் சேலை ராஜேஷ், தொகுதி தலைவர் சேலை சுரேஷ், தொகுதி செயலாளர் ஜெயகண்ணன்,

நகர செயலாளர் மதன், பயிற்சியாளர் ஆனஸ்ட்ராஜ், ஈக்காடு வினோத், சரண்ராஜ் பூண்டி ஒன்றிய தலைவர் கிரி, ஒன்றிய செயலாளர் பார்த்திபன், டில்லிராசு, கூவம் வினோத், தியாகு, நவீன், பற்குணன், சரண்ராஜ், மணிகண்டன்,  அஜித்குமார், திருவள்ளூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் சேலை சரவணன், பொன்ராஜ், வேல்ராஜ் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : Sai Deena ,Tiruvallur Assembly ,BJP ,D. Das ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...