×

கோட்டைகுப்பம் கிராமத்தில் மேற்கூரை இல்லாத அங்கன்வாடி மையம்: அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை, ஏப். 1: கோட்டைகுப்பம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் சேதமடைந்து மேற்கூரை இல்லாமல் காட்சியளிக்கிறது. இதை அகற்றிவிட்டு புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் மஞ்சங்காரணை ஊராட்சியில் கோட்டை குப்பம் கிராமத்தில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் உள்ளது. இதில், அதே பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த அங்கன்வாடி மையம் கடந்த நவம்பர், டிசம்பர் மாதம் பெய்த மழையால் கட்டிடம் விரிசல் ஏற்பட்டு மேற்கூரை சேதமடைந்தது. அதனால், மேற்கூரையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளே அகற்றினர்.

மேலும் பூரான், தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளுடன் தான்  மாணவ - மாணவிகள்  அச்சத்துடன் படித்து வந்தனர். இதனால், தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் படிப்பதற்கு அங்கன்வாடிக்கு அனுப்ப தயங்கினர். மேலும், கொரோனா பாதிப்பால் அங்கன்வாடி மையமும் மூடப்பட்டது. மேலும்,  இம்மையம் குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் அப்பகுதி மக்கள் பலமுறை  மனு கொடுத்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அங்கன்வாடி மையம்  அருகில் உள்ள பள்ளி கட்டிடத்தில் ஏற்கனவே இயங்கி வந்தது. எனவே, பழைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Roofless Anganwadi Center ,Kottaikuppam Village ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...