×

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், சரோஜினி தெருவை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (24). நேற்று முன்தினம் இரவு ஆனஸ்ட்ராஜ், வீட்டில் சாப்பிட்டு முடித்து தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், அறைக்கு சென்று பார்த்தபோது, ஆனஸ்ட்ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆனஸ்ட்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.புகாரின்படி குன்றத்தூர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆனஸ்ட்ராஜ் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் சில நாட்களாக, அவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரிந்தது….

The post வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kunrathur ,Anastraj ,Sarojini Street, Thirumudivakkam ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழைப் பதிவு!!