×

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா

இளையான்குடி, ஏப்.1: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு மின்னொளி அலங்காரத்தில் தேரோட்டம் நடைபெற்றது. இளையான்குடி அரு கே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நாட்களான 7ம் திருநாளான நேற்று முன்தினம் அம்மனுக்கு பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. 8ம் திருநாளான நேற்று இரவு 7.30 மணி அளவில் மக்கள் வெள்ளத்தில் மின்னொளி தீப அலங்காரத்தில் முத்துமாரியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை காண தாயமங்கலம், திருவள்ளூர், கண்ணமங்கலம், இளையான்குடி, கீழாயூர், தேவாத்தகுடி, பிராந்தமங்கலம் உள்ளிட்ட ஐநூற்றுக்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் ஏராளமானோர் தாயமங்கலம் வந்திருந்தனர்.

Tags : Panguni Festival ,Thayamangalam Muthumariamman Temple ,
× RELATED மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா