தேசிய போட்டியில் சிவகங்கை பள்ளி மாணவர்கள் வெற்றி

சிவகங்கை, ஏப்.1: கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் சோழபுரம் ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றனர்.நாமக்கல்லில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட மாநில அளவிலான தேர்வு போட்டியில் சிவகங்கை அருகே சோழபுரம் ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி பெண்கள் வாலிபால் அணியினரும், ஆண்கள் வாலிபால் அணியினரும், பெண்கள் குண்டு எறிதல் போட்டியில் ஒரு மாணவியும் தமிழ்நாடு அணி சார்பாக தேர்வு செய்யப்பட்டனர்.  இந்த அணியினர் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று ஆண்கள் வாலிபால் போட்டியில் முதல் சுற்றில் கர்நாடகா, காலிறுதியில் கோவா, அரையிறுதி போட்டியில் மகாராஷ்டிரா, இறுதிப்போட்டியில் கேரளா அணியை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.

பெண்களுக்கான வாலிபால் போட்டியில் காலிறுதியில் மகாராஷ்டிரா, அரையிறுதியில் கோவா, இறுதிப் போட்டியில் உத்தரப் பிரதேசத்தை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றனர். பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் அனைத்து மாநில வீரர்களோடு கலந்து கொண்டு இப்பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.  வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல், ரஞ்சிதசரண்யா ஆகியோரை பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories:

>