மண்டபம் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம், ஏப்.1: ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை ஆதரித்து திருப்புல்லாணியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி நேற்று பிரசாரம் செய்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, தேர்தல் பணி பொறுப்பாளர் ரவிச்சந்திர ராமவன்னி, மாவட்ட துணை செயலாளர் சங்கு முத்துராமலிங்கம், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர்கள் புல்லாணி, நாகேஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்ரமணியன், ஆனந்தன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.இதை தொடர்ந்து மண்டபத்தில் உள்ள 18 வார்டுகளில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வாக்கு சேகரித்தார். சட்டமன்ற தொகுதி தேர்தல்குழு பொறுப்பாளர் ரவீந்திரநாத் ஜெயபால், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மண்டபம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தவ்பிக் அலி, ஒன்றிய தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் ஒன்றியம் தொழுதூர் எஸ்டிபிஐ கட்சி பாசித் அகமது, பாகித் ரகுமான், அக்பர் அலி, அஸ்வான் மற்றும் அதிமுகவை சேர்ந்த சாகுல் ஹமீது, ஹவுஸ் கான், இப்ராகிம் உள்பட 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன் ஏற்பாட்டிலும், வாலாந்தரவை ஊராட்சி முன்னாள் தலைவர் தங்கையா மகன் செல்வம் உள்பட 10 மேற்பட்டோர் ராஜா ஏற்பாட்டிலும் அதிமுகவில் இருந்து விலகி வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Related Stories:

More