×

விபத்தில் அதிமுக பிரமுகர் பலி

வாடிப்பட்டி,ஏப்.1: வாடிப்பட்டி அருகேயுள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் புல்லமரெட்டியார் மகன் லட்சுமணன் வயது(45). அதிமுக பி
ரமுகரான இவர் வாடிப்பட்டி நீதிமன்றம் அருகில் சோழவந்தான் தொகுதி அதிமுக கட்சி அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மின்வாரிய அலுவலக பகுதியிலிருந்து நடந்து வந்தார். அப்போது மதுரையிலிருந்து சின்னாளபட்டி நோக்கி சென்ற டூவீலர் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : AIADMK ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...