ரஜினி மக்கள் மன்றத்தினரிடம் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

வாடிப்பட்டி,ஏப்.1: சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.வெங்கடேசனுக்கு தொகுதியில் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சோழவந்தான் தொகுதி ரஜினி மக்கள் மன்றத்தினைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளைஞர்கள், மகளிரணியினர் மற்றும் ரஜினி ரசிகர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.ரஜினி மக்கள் மன்ற வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் தீபன், துணை செயலாளர் பரமன், பேரூர் செயலாளர் பட்டைசேகர், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் வாடிப்பட்டி மாதா கோவில் அருகிலிருந்து ரஜினிமன்ற கொடியுடன் பேரணியாக வந்து வாடிப்பட்டி அண்ணா சிலை முன்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு பொன்னாடை அணிவித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர். மேலும் ரஜினி மக்கள் மன்றத்தினர் வீடுவீடாக சென்று வாக்குகள் சேகரித்தனர்.

திமுக வேட்பாளர் வெங்கடேசன், தான் வெற்றி பெற்றவுடன் சோழவந்தான் தொகுதியில் உடனடியாக கலைக்கல்லூரி, உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் எனஉறுதியளித்தார். அப்போது திமுக நிர்வாகிகள் பால்பாண்டியன், பிரகாஷ், அயூப்கான், சி.பி.ஆர்.சரவணன், வெற்றி, வழக்கறிஞர்கள் கோகுல்நாத், ராஜாஜி, கோகுல், முரளி, பிரபு, ராகுல் சர்வேஷ், சிவக்குமார், கார்த்தி, அரவிந்தன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>