திருப்பரங்குன்றம் தொகுதியில் ராஜன்செல்லப்பா தீவிர வாக்குசேகரிப்பு

மதுரை, ஏப்.1: திருப்பரங்குன்றம் தொகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பலதரப்பட்ட வாக்குறுதிகளை அளித்து அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்ேபாது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் ெசல்லப்பா எம்எல்ஏ, விவசாயிகள், காய்கறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இதுதவிர முக்கிய பிரமுகர்களை சந்தித்து அவர் ஆதரவு கோரினார். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட ஐராவதநல்லூர் பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது, அவரை ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்றனர். பிரசாரத்தின் போது அவர் வாக்குறுதி அளித்து பேசும்போது, ‘‘சுற்றுச்சூழல் பூங்கா கொண்டு வரப்படும். இத்தொகுதிக்கான பிரத்யேக தனியார் துறை ேவலைவாய்ப்பு மையம் அமைக்கப்படும். கிரிவலப் பாதையில் பக்தர்கள் இளைப்பாறும் வகையில் நவீன கூடம் அமைக்கப்படும். தென்கால் கண்மாயில் படகு குழாம் ஏற்படுத்தப்படும்.

திருப்பரங்குன்றத்தில் அரசு பொதுமருத்துவமனையில் நவீன ஸ்கேன் சென்டர் அமைக்கப்படும். வளையங்குளம் விவசாயிகளுக்கு குளிர்பதனிடும் கிடங்கு கட்டித்தருவேன். சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்காக நவீன வாகன நிறுத்தம் அமைக்கப்படும். பாரம்பரிய மரக்காடுகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்தார்.பிரசாரத்தின்போது மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், வட்ட செயலாளர் கணேச மூர்த்தி, அவைத்தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories:

>