×

பாமக வேட்பாளருக்கு அதிமுகவினர் வீரவாள் பரிசு


திருப்போரூர்: திருப்போரூர் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் திருக்கச்சூர் கே.ஆறுமுகம் கூட்டணி கட்சியினருடன் திருப்போரூர் ஒன்றியம் தையூர் ஊராட்சியின் செங்கண்மால், இளவந்தாங்கல், குளக்கரை, ராஜேஸ்வரி நகர், கோயில் மான்யம், பட்டினத்தம்மன் கோயில் தெரு, பெரிய பில்லேரி, சின்ன பில்லேரி, மாரியம்மன் கோயில் தெரு, சின்னமா நகர், பெரியமா நகர், புதிய காலனி, செல்வி நகர், ஏரி எதிர்வாயில், குப்பமா நகர், பாலமா நகர், கோமான் நகர், கேளம்பாக்கம், சாத்தங்குப்பம், வெண்பேடு, காட்டூர், இள்ளலூர், ஈச்சங்காடு ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தையூர் எஸ்.குமரவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் நந்தகுமார், இளவந்தாங்கல் கிளை அதிமுக செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலையில் அதிமுகவினர் திரண்டு நின்று வரவேற்பத்தனர். பின்னர், வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்துக்கு வீரவாள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வார்டுகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தின்போது தையூர் பெரிய ஏரியை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்துதல், கிராம நத்தம் வகைப்பாட்டில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மனைப்பட்டா வழங்குதல், தையூரில் அரசு மாநகர போக்குவரத்து பணிமனை அமைத்தல் என்பன உள்பட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி அவர் பேசினார்.  

அவருடன் பாமக மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ தண்டரை மனோகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆனூர் பக்தவச்சலம், திருப்போரூர் நகர அதிமுக செயலாளர் முத்து, நகர நிர்வாகிகள் சக்தீஸ்வரி சிவராமன், முன்னாள் கவுன்சிலர்கள் சேகர், சக்திவேல், எத்திராஜ், தணிகாசலம், லவன், சுந்தரமூர்த்தி, பாமக மாநில துணை அமைப்பு செயலாளர் என்.எஸ்.ஏகாம்பரம், மாவட்ட துணை செயலாளர்கள் ராமகிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி, காயார் ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் அருண்குமார், கங்காதரன், ரோஹித், கோதண்டன், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் துரை பூபாலன், நகர பாமக செயலாளர் பாபு, நிர்வாகிகள் மோகன், பிரகாஷ், பரந்தாமன், பாலாஜி  உள்பட பலர் சென்றனர்.

Tags : AIADMK ,Bamaka ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...