×

விவசாய தொழிலாளர்களுடன் வேர்க்கடலை பறித்து அதிமுக வேட்பாளர் பிரசாரம்

காஞ்சிபுரம்: வயலில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை சந்தித்து, அவர்களுடன் வேர்க்கடலை பறித்து அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார். உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக வி.சோமசுந்தரம் போட்டியிடுகிறார். இவர், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடம்பர் கோயில், வெங்கச்கேரி, ஆதம்பாக்கம், காவாம்பயிர், வயலக்காவூர், நெய்யாடுபாக்கம், புல்லம்பாக்கம், திருமுக்கூடல், மதூர், சிறுமயிலூர், மலையன்குளம், சாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புல்லம்பாக்கம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பின்போது வயலில் வேர்க்கடலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம், சந்தித்து, அவர்களுடன் வேர்க்கடலை பறித்து அங்கிருந்த விவசாயத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது, விவசாயம் சார்ந்த பகுதியான உத்திரமேரூர் தொகுதியில் விவசாயிகளின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விவசாய இடுபொருட்களை நகர்பகுதியில் இருந்து கிராமங்களுக்கு கொண்டு வரவும், விளைபொருட்களை கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு கொண்டு செல்லவும் போதிய போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். குளம், குட்டை, ஏரிகள் தூர்வாரப்பட்டு நீராதாரங்கள் மேம்படுத்தப்படும். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உத்திரமேரூர் சுற்றுலா நகரமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் தள்ளுபடி, என விவசாயிகள், பெண்கள் நலன்காக்கும் அரசாக அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே, இந்த நல்லாட்சி தொடர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அவருடன், அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் களக்காட்டூர் ராஜீ, அக்ரி நாகராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, நகர இளைஞர் அணி செயலாளர் தமிழ்வாணன், நகர மாணவரணி செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கோல்டு ரவி, பேரூராட்சி செயலாளர் ஜெய விஷ்ணு பாமக துணைத்தலைவர் பொன்.கங்காதரன், தமாகா மாவட்டத் தலைவர் மலையூர் புருஷோத்தமன் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் இருந்தனர்.

Tags : AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...