×

தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு: தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தொழில் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், பீடி சுருட்டு நிறுவனங்கள் பொது தனியார்துறை உள்ள அனைத்து நிறுவனங்களில் தற்காலிக, ஒப்பந்த, தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதை தொடர்ந்து அன்றைய தினம் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார்கள் பெற தொழிலாளர் துறை, தொழிலாளர் ஆணையரால் மாவட்டம்தோறும் தனி கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) நீலகண்டன் (9445398743), தொழிலாளர் துணை ஆய்வர் மனோஜ் ஷியாம் சங்கர் (9677829007), தொழிலாளர் உதவி ஆய்வர் மாலா (9790566759) ஆகிய செல்போன் எண்களிலும் 044-27237010 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், தொழிலாளர் உதவி ஆணையர் சண்பகராமன் (9940856855), தொழிலாளர் துணை ஆய்வாளர் கமலா (9952639441) மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பிரபாகரன் (9944214854) ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Assistant Commissioner of Labor ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் குடியரசு...