சத்துணவு பணியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி, ஏப்.1: கிருஷ்ணகிரியில் நடந்த தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றிய மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அருள்வேந்தன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் செல்வி முன்னிலை வகித்தார்.

இதில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், திமுக தேர்தல் அறிக்கையில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை அரசு பணியாளர்களாகப் பணி அமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும். குறைந்தபட்ச ஓய்வூதியமும், பணிக்கொடையும் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>