வேப்பனஹள்ளி அருகே மரத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பலி

வேப்பனஹள்ளி, ஏப்.1: வேப்பனஹள்ளி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில், 2 வாலிபர்கள் பலியாகினர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள பந்திகுறி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி(40). இவரது நண்பர்களான சின்னசூலாமலை கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன்(28) மற்றும் திம்மராஜ்(40) ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, மது அருநதி் விட்டு அதிவேகமாக காரில் வந்துள்ளனர். அப்போது நாரணிகுப்பம் அருகே வந்த போது, சாலையோர வேப்பமரத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில், ஸ்டீபன் மற்றும் ரவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த திம்மராஜை, அருகிலிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த குருபரப்பள்ளி போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: