சட்டமன்ற தேர்தல் எதிரொலியாக போலீசார் கொடி அணிவகுப்பு

கடத்தூர், ஏப்.1: சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நேரத்தில் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் இடையே மோதலை தடுக்கவும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்கும் துணை ராணுவம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் ஆயுதப்படை போலீசார், உள்ளூர் போலீசார், ஊர்க்காவல் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் நேற்று,கடத்தூர் காவல் நிலையத்தில் இருந்து, இன்ஸ்பெக்டர் ஜெய்சில்குமார் தலைமையில் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த பேரணி கடத்தூர் அரசு பள்ளி, தர்மபுரி- பொம்மிடி சாலை, பேருந்து நிலைய முக்கிய வீதி, நத்தமேடு, மோட்டாங்குறிச்சி, தா.அய்யம்பட்டி, ரேகடஅள்ளி என முக்கிய வீதிகள் வழியாக அணிவகுத்து சென்றனர்.

Related Stories:

>