சடையநேரி கால்வாய் நிரந்தர கால்வாயாக மாற்ற நடவடிக்கை திமுக வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் உறுதி

உடன்குடி,ஏப்.1:  சடைய நேரி கால்வாய் நிரந்தர கால்வாயாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருச்செந்தூர் தொகுதி மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியின் திமுக வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள ஆசீர்வாதபுரத்தில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து நங்கை மொழி, ஆனையூர், ராமசுப்புரமணியபுரம், வலசைகிணறு, கல்விளை, இந்திராநகர், அம்பேத்கர்நகர், பூலிகுடியிருப்பு, அணைத்தலை, மெஞ்ஞானபுரம், கோவிந்தம்மாள்புரம், முத்துலெட்சுமிபுரம், நவலடிவி ளை, வள்ளியம்மாள்புரம், காக்கிவிளை, செம்மறிக்குளம், குமாரலெட்சுமிபும், திருப்பணி, சுந்தரபுரம், மானாடு, சிதம்பரபுரம், செட்டிவிளை, தண்டுபத்து, அத்தியடித்தட்டு ஆகிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘விவசாயத்தை மேம்படுத்தவும், நீர் மேலாண்மையில் பல்வேறு திட்டங்கள் வகுத்து சடையநேரி கால்வாயை நிரந்தர கால்வாய் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலைகள் தூர் வாரப்பட்டு மழைக்காலங்களில் தண்ணீர் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் மெஞ்ஞானபுரத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

வேட்பாளருடன் மாநில மாணவரணி துணைஅமைப்பாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன், மாவட்ட சுற்றுசூழல் அணி ரவி பொன்பாண்டி, யூனியன் சேர்மன் பாலசிங், துணைச்சேர்மன் மீரா, மாவட்ட அமைப்பாளர்கள் மகளிரணி ஜெசிபொன்ராணி, நெசவாளர் அணி மகாவிஷ்ணு, துணை அமைப்பாளர்கள் விவசாயஅணி சக்திவேல், பெத்தான்முருகன், இலக்கிய அணி ரஞ்சன், மீனவரணி மெராஜ், இளைஞரணி அஸாப், வர்த்தகஅணி இளங்கோ, ரவிராஜா, சிறுபான்மைநல உரிமைப்பிரிவு சிராசூதீன், செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், கிளை செயலாளர்கள் ஜெரால்டு தனராஜ், விஜயன், ஜோசப், சசிகுமார், கிளாட்சன் தங்கராஜ், கேடிசி தினகர், விசிகஒன்றிய செயலாளர் சங்கர், விசிக மண்டல செயலாளர் தமிழினியன், வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ், மதிமுக ஒன்றியச் செயலாளர் இம்மானுவேல், செம்மறிக்குளம் பஞ்சாயத்து தலைவர் அகஸ்டா மரியதங்கம், முன்னாள் துணைச்சேர்மன் தேவபாலன்,

அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர்ராஜன், டேவிட்ராஜன், ஒன்றிய தகவல்தொழில்நுட்பஅணி அமைப்பாளர் பாலமுருகன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>