×

பிஎம் கேர்ஸ் நிதி அரசு பணமல்ல…: உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: கொரோனாவுக்காக நிதி திரட்டுவதற்காக, ‘பிம் கேர்ஸ் நிதி’ என்ற அமைப்பை பிரதமர் மோடி தொடங்கினார். இதில், பல ஆயிரம் கோடி நிதி குவிந்துள்ளது. இது எதற்காக செலவிடப்படுகிறதா? அது சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறதா? அதன் வெளிப்படைத்தன்மை ஆகியவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதற்கு பிரதமர் அலுவலக செயலாளர் பிரதீப் குமார் வத்சவா தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘பிஎம் கேர்ஸ் நிதி’ என்பது இந்திய அரசியலமைப்பால் அல்லது நாடாளுமன்ற அல்லது எந்த மாநில சட்டமன்றத்தாலும் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை அல்ல. அதனால், இதற்கு கிடைக்கும் நிதி, ஒன்றிய அரசின் நிதி அல்ல. இந்த நிதி ஆடிட்டர்களால் சரிபார்க்கப்பட்டு அதன் அறிக்கை அறக்கட்டளையின் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். தகவல் உரிமை சட்டத்திலும் இந்த நிதி பற்றி கேள்வி எழுப்ப முடியாது. இதற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து நிதியும் ஆன்லைன் வழியாகத்தான் பெறப்பட்டுள்ளது,’ இவ்வாறு அதில் கூறியுள்ளார்.இந்த பதிலை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி டி.என்.பாட்டீல், விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்….

The post பிஎம் கேர்ஸ் நிதி அரசு பணமல்ல…: உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Union government ,New Delhi ,PM Modi ,Cares Fund ,Corona ,PM ,Dinakaran ,
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...