தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதி மீறியதாக 173 வழக்குகள் பதிவு

தூத்துக்குடி, ஏப்.1:   தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும்  அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை  வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தேர்தல் பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதிமுறை மீறலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நடத்தை விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தேர்தல் விதிகளை மீறியதாக விளாத்திகுளம் தொகுதியில் 34 வழக்குகளும், தூத்துக்குடியில் 25 வழக்குகளும், திருச்செந்தூரில் 23 வழக்குகளும், வைகுண்டத்தில் 20 வழக்குகளும், ஓட்டப்பிடாரத்தில் 19 வழக்குகளும், கோவில்பட்டியில் 52 வழக்குகளும் என மொத்தம் 173 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories:

>