×

ஆறுமுகநேரி, புன்னக்காயல் பகுதியில் எல்லை பாதுகாப்புபடையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

ஆறுமுகநேரி, ஏப்.1:  ஆறுமுகநேரி, புன்னக்காயல் பகுதிகளில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எல்லை பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தலின் போது பதற்றமான பகுதிகளில் பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கொடியணிவகுப்பு நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நேற்று மாலை ஆறுமுக
நேரியில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சாகுல் ஹமீது ஆகியோர் தலைமையில் கொடியணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. ஆறுமுகநேரியில் மெயின் பஜாரில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு மூலக்கரை ரோடு வழியாக பூவரசூர், காந்திதெரு, விநாயகர்கோயில் தெரு வழியாக ஸ்டேட்பாங்க் முன்பு முடிவடைந்தது.  

இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் போலீசார் மற்றும் ஆயுதம் ஏந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கலந்துகொண்டனர். ஆறுமுகநேரி பகுதியில் தேர்தல் சம்பந்தமாக 4வது முறையாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து ஆத்தூர் காவல்நிலையத்திற்குட்பட்ட புன்னக்காயல் ஊரில்  எல்லை பாதுகாப்பு படைவீரர்களின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹரிஷ்சிங் தலைமையில் நடந்தது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் உள்ளுர் போலீசார் உட்பட 100 மேற்பட்டோர் போலீசார் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஆத்தூரிலும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் கொடியணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

Tags : Arumuganeri, ,Punnagayal area ,
× RELATED காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து...