கீழப்பாவூரில் ஹரிநாடாரை ஆதரித்து பிரசாரம் கல்குவாரி பிரச்னைகளுக்கு தீர்வு பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா பேச்சு

ஆலங்குளம் ஏப். 1: ஆலங்குளம் தொகுதி பனங்காட்டுப்படை கட்சி வேட் பாளரும், ஒருங்கிணப்பாளருமான  ஹரி நாடாரை ஆதரித்து கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா கீழப்பாவூர் ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

ஆண்டிப்பட்டி, சிவத்தையாபுரம், பெத்தநாடார்பட்டி, கரும்பனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தலைக்கவசம் சின்னத்திற்கு வாக்குசேகரிக்க வந்த இருவருக்கும்  மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கிராம மக்கள் தங்கள் பகுதியில் நிலவும் குறைகள், கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். சேதமடைந்த பள்ளிகளின் அவலம், குடிநீர் தட்டுப்பாடு, பஸ்வசதியின்மை ஆலங்குளம் பகுதியில் ஆபத்தான முறையில் செயல்படும் கல்குவாரிகள், உருக்குலைந்த சாலைகள் உள்ளிட்ட குறைகளை முன்வைத்தனர்.

இதையடுத்து ராக்கெட் ராஜா பேசுகையில் ‘‘ஆலங்குளம் தொகுதி முழுவதும் பல்வேறு கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட செய்துதரப்படாததால் மக்கள் ெபரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இங்கு மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருக்கும் கல்குவாரி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். கோரிக்கைகள் அனைத்தையும் வென்றெடுக்க நமது வேட்பாளர் ஹரிநாடாருக்கு தலைக்கவசம் சின்னத்தில்  அமோக வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவார்.

பனைமரத் தொழில் வளர்ச்சிக்கு பேருதவி, விவசாயிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, பீடி சுற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி இலவச மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவார் என்றார்’’.

பிரசாரத்தில்  இளைஞர் அணி மாநில செயலாளர் ஆனைகுடி சத்ரியன் பாபு,  ராக்கெட் ராஜா மக்கள் இயக்க மாநில அணி செயலாளர் ராஜா பாபு,  மாநில கொள்கை பரப்புச் செயலாளர்கள் லாரன்ஸ்,  விக்னேஷ் கார்த்திக்,  மகளிர் அணி மாநில பொறுப்பாளர் மெர்லின் பாக்கியராஜ்,  தென்காசி மாவட்டச் செயலாளர் அணி செயலாளர் சேர்ம ராஜ்,  தென்காசி மாவட்ட சமூக வலைதள அணி செயலாளர் கபிலன், இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன், ஆலங்குளம் நகரச்செயலாளர் அலெக்ஸ்,  ஆலங்குளம் ஒன்றிய துணை செயலாளர் ஆனந்த், நெல்லை சேவியர்,  சமூக வலைதள அணி மாநில தலைவர் ஜீவா, வேப்பங்காடு அருண் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>