மானூர் ஒன்றிய பகுதியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம்

நெல்லை, ஏப். 1:  நெல்லை தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தொகுதி முழுவதும்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று மானூர் ஒன்றியத்திற்குட்பட்ட எட்டாங்குளம், திருமலாபுரம், களக்குடி, தெற்குபட்டி, சீதைக்குறிச்சி, குறிச்சிகுளம், மடத்தூர், துலுக்கர்பட்டி, வல்லவன்கோட்டை  உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். வீடு வீடாக பொதுமக்களை சந்தித்து  தாமரை சின்னத்திற்கு நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: நெல்லை தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை  ஏற்படுத்துவேன். மானூர் பெரியகுளத்திற்கு நீர் வரக்கூடிய வழித்தடத்தில்  பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இணைப்பு சாலை இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாவதாக தெரிவித்தனர். இந்த பாலத்தை இணைப்பு சாலை அமைக்கப்படும், என்றார். பிரசாரத்தில் மானூர் ஒன்றிய நிர்வாகி முத்து, துணை தலைவர் முத்தையா, பொருளாளர்  மாரிமுத்து, உச்சினிமாகாளி கணேசன், முருகேஷ், இசக்கிமுத்து, அதிமுக நிர்வாகிகள்  கொம்பையா, காளிப்பாண்டி, தமாகா மாவட்ட தலைவர் சுத்தமல்லி  முருகேசன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>