×

அதிமுக அரசின் திட்டங்களை எண்ணி பார்த்து வாக்களியுங்கள் வேட்பாளர் தச்சை கணேசராஜா பேச்சு

நெல்லை, ஏப். 1: நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா நேற்று பாளை ஒன்றியத்திற்குட்பட்ட அவிஞாப்பேரி, மேல புத்தனேரி, நொச்சிகுளம் செல்லத்துரை நகர், புதுக்குளம் சீனிவாசாநகர், முன்னீர்பள்ளம் ஜோதிநகர், களக்காடு பேரூராட்சிக்குட்பட்ட சிங்கம்பத்து, தம்பிதோப்பு, கருவேலங்குளம், மேலபத்தை, கலுங்கடி உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார். வேலன்குளத்தில் அவர் பேசியதாவது: அதிமுக தேர்தல் அறிக்கையில் பொதுமக்களுக்கு தேவையான ஏராளமான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்து தரப்பும் பயனடையும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து தேர்தல் அறிக்கையை தந்துள்ளனர். தமிழக அரசின் 2 ஆயிரம் மினிகிளினிக்குகளால் மக்கள் அதிகம் பயன்பெற்று வருகின்றனர்.

அதிமுக தேர்தல் அறிக்கையில், ரேஷன் கார்டுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 6 சிலிண்டர் கிடைக்க வேண்டுமானால் வரும் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1500 வழங்கப்பட உள்ளது. ரேஷன் பொருட்கள் வருங்காலங்களில் வீடு தேடி வரும். இலவச வாஷிங்மெஷின் வழங்கப்படும். இத்திட்டங்களை எண்ணிப்பார்த்து மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் மாவட்ட விவசாய அணி செயலாளர் முருகேசன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரியபெருமாள், ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், நாங்குநேரி லக்கான், மாவட்ட துணை செயலாளர் கவிதா பாலசுப்பிரமணியன், இளைஞர் அணி இணை செயலாளர் குபேந்திரா மணி, அக்ேரா நிர்வாக இயக்குநர் உக்கிரபாண்டி, அரியகுளம் செல்வராஜ், அத்திமேடு லட்சுமிகாந்தன், முன்னாள் ஊராட்சி செயலாளர் அண்ணாதுரை, நெல்லை காவியன், குருசாமி, ஊராட்சி செயலாளர் ராமகிருஷ்ணன், வேலன்குளம் அந்தோணி, மேலபுத்தனேரி வேம்பன், வக்கீல் பாலசுப்பிரமணியன், தங்கபாண்டியன், கணேசன், காதர், மகளிரணி பானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK government ,
× RELATED அதிமுக அரசு பட்ஜெட் அறிவிப்புகள்...