×

கடையநல்லூர் தொகுதியில் தேவாலயங்கள் சீரமைக்கப்படும்


செங்கோட்டை, ஏப்.1:  கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தொகுதியில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சென்று பங்குத்தந்தைகளிடம் ஆசி பெற்று கிறிஸ்த மக்களிடம் ஆதரவு திரட்டினார். இதன் ஒரு பகுதியாக  அகரகட்டில் புனித அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி பங்குத்தந்தை எட்வின் ராஜிடம் ஆசி பெற்ற கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா கிறிஸ்தவ மக்களிடம் வாக்குசேகரித்தார். இதே போல் ஏ.ஜி. சபையினர், கிறிஸ்தவ கூட்டமைப்பினரிடம் ஆதரவு திரட்டிய அவர், தெற்குமேடு, செங்கோட்டை, வல்லம், கணக்கப்பிள்ளை வலசை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  தேவாலயங்களுக்கு சென்று ஆசி பெற்று வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் பேசுகையில் ‘‘சிறுபான்மையினர் நலன்கருதி ஜெருசலேம் புனித பயணம் செல்லும் ஆயிரம் பேருக்கு ஆண்டுக்கு ரூ.37 ஆயிரம் வீதம் முழு கட்டணத்தையும் தமிழக அரசே செலுத்தும். சேதமடைந்த தேவாலயங்கள் சீரமைக்கப்படும்’’ என்றார். பிரசாரத்தில் அதிமுக செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் செல்லப்பன், ஆய்க்குடி பேரூர்  செயலாளர் முத்துக்குட்டி, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் வி.பி..மூர்த்தி, சாம்பவர் வடகரை செயலாளர் நல்லமுத்து, துணைச் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு ஞானராஜ், பாமக  மாநிலத் துணைத்தலைவா் அய்யம்பெருமாள், மாவட்டச் செயலாளர் சீதாராமன், தமாகா அய்யாத்துரை பாண்டியன், வடகரை ராமர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Kadayanallur ,
× RELATED கடையநல்லூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் பலி