×

வாக்களிப்பதை தெரிந்து கொள்ளும் விவி பேட்டில் சின்னம் பொருத்தும் பணி

பொள்ளாச்சி, மார்ச் 31: பொள்ளாச்சியில் நேற்று, வாக்காளர்கள் வாக்களிப்பதை தெரிந்து கொள்ளும் விவி பேட்டில் சின்னம் பொருத்தும் பணி சப்-கலெக்டர் மேற்பார்வையில் நடந்தது.  வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வைக்கப்பட வேண்டிய, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் இயந்திரம் அனைத்தும், பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன், தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளது.  இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி இன்று (31ம் தேதி) நடைபெற உள்ளது. முன்னதாக நேற்று, வாக்காளர்கள் யாருக்கு எந்த சின்னத்தில் வாக்களித்தனர்? என ெதரிந்து கொள்ளும் விவி பேட் இயந்திரத்தில் கட்சி மற்றும் சுயேட்சை  சின்னம் பொருத்தும் பணி சப்-கலெக்டர் வைத்திநாதன் மேற்பார்வையில் நடந்தது. விவி பேட் இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை தொடர்ந்து, இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், வாக்காளளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முக்கிய பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், தாசில்தார் தணிகைவேல் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vivi Battle ,
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு