மாசடைந்த வாழைத்தோட்டம் ஆறு

வால்பாறை, மார்ச் 31: வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றின் கரையோரம் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. தற்போது மழை இல்லாததும், கோடை வெயிலின் தாக்கத்தால் அற்றில் நீர் வரத்து குறைந்துள்ளது. அங்கு வசிக்கும் சில குடியிருப்பு வாசிகள், குப்பைகள் முறையாக குப்பைத்தொட்டியில் கொட்டாமல் ஆற்றில் வீசிவிடுகின்றனர். இதனால் ஆறு சாக்கடைபோல் காட்சியளிக்கிறது.  இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், இயற்கை வளங்களை பாதுகாக்க ஆற்றோர மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.   தேயிலை பயிரிட்ட பகுதிகளைவிட்டு மீதம் உள்ள வனப்பகுதி மற்றும் ஆறுகளை நாம் பாதுகாத்தால் மட்டுமே வறட்சியின் பிடியில் தப்பிக்கலாம். எனவே ஆறுகளில் குப்பைகள் போடுவதை நகராட்சி தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>