தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காமல் 187 ஆசிரியர்கள் விளக்க கடிதம்

திருப்பூர், மார்ச் 31: தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க முடியாத 187 ஆசிரியர்கள் விளக்க கடிதம் அனுப்பியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் விறு, விறுப்பாக நடந்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ளவர்களுக்கும் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்ப்பிணிகள், மகப்பேறு விடுப்பில் இருக்கும் தாய்மார்கள், புற்றுநோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி ஆகியவர்களுக்கு மட்டும் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இது தவிர இதர பணியாளர்களில் முதல் பயிற்சி வகுப்பில் பங்கேற்று, 2-வது பயிற்சி வகுப்பில் பங்கேற்க நியமன கடிதம் பெறாதவர்களும், இதுவரை 2 பயிற்சி வகுப்பிலும் பங்கேற்று நியமனம் கடிதம் பெறாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் உள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வராதவர்கள், மருத்துவ விடுப்பில் இருப்பவர்கள் என பணி ஆணை கிடைக்காத 187 ஆசிரியர்கள் அதற்கான விளக்க கடிதத்தை முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் கூறியதாவது: தேர்தல் பணியினை ஏற்காமல் அலட்சியப்படுத்தும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, துறைரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

Related Stories:

>