குன்னூர் மார்க்கெட் பகுதியில் திமுக வேட்பாளர் ராமசந்திரன் வாக்கு சேகரிப்பு

ஊட்டி, மார்ச் 31:  குன்னூர் மார்க்கெட், நகர் பகுதிகளில் திமுக வேட்பாளர் ராமசந்திரன் வாக்கு சேகரித்தார்.  குன்னூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராமசந்திரன் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் மற்றும் கோத்தகிரி ஒன்றியம் மற்றும் நகர பகுதிகளில் தினமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த 2 நாட்களாக குன்னூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். நேற்று குன்னூர் நகரில் உள்ள மார்க்கெட் பகுதி, வி.பி. தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: குன்னூர் மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளின் வாடகை பிரச்னைக்கு தீர்வு காணப்படும். அனைத்து வியாபாரிகளின் வாடகையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று சென்ற பின் வீடு இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். எனவே, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தொழிலார்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் தொழில் நுட்ப பூங்கா அமைத்து வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். குன்னூர் அரசு கலைக்கல்லூரி அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும். எனவே திமுக ஆட்சி அமைய உதய சூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு பிரசாரம் செய்தார். இந்த வாக்கு சேகரிப்பின்போது, குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, அன்வர்கான், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வம், சதக்கத்துல்லா, ஜாகிர், முபாரக், கலீம், மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன், அவைத்தலைவர் பில்லன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எக்ஸ்போ செந்தில், இளங்கோ, ராஜூ, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெள்ளி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக உட்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Related Stories:

>