×

3தொகுதிகளிலும் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்

ஊட்டி, மார்ச் 31:   நீலகிாியில் உள்ள 3 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா–்களின் புகைப்படம், சின்னம் அடங்கிய விவரங்கள் பொருத்தும் பணிகள் நேற்று துவங்கியது.
தமிழக சட்டமன்ற பொதுத்தோ–்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய 3 தொகுதிகளுக்கும் 20 சதவீத கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஊட்டி தொகுதியில் அமைந்துள்ள 308 வாக்குச்சாவடிகளுக்கு 370 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 407 வி.வி.பேட்கள், குன்னூர் மற்றும் கூடலூா் தொகுதிகளில் உள்ள தலா 280 வாக்குச்சாவடிகளுக்கு தலா 336 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 370 விவிபேட் இயந்திரங்கள் பிரித்து ஏற்கனவே அனுப்பப்பட்டு உள்ளன. ஊட்டி தொகுதிக்கு பிாீக்ஸ் பள்ளியிலும், கூடலூர் தொகுதிக்கு புனித தாமஸ் பள்ளியிலும், குன்னூா் தொகுதியில் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூாியிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் சுழற்சி முறையில் வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா–்கள் புகைப்படம், பெயா், சின்னங்கள் அடங்கிய பட்டியல் பொருத்தும் பணி நேற்று துவங்கியது. ஊட்டி பிாீக்ஸ் நினைவு மேல்நிலை பள்ளியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. இதேபோல், மற்ற தொகுதிகளிலும் அறைகள் திறக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா–்களின் விவரங்கள் பொருத்தும் பணி நடந்தது. ஊட்டி மற்றும் குன்னூரில் இப்பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். தவறுகள் ஏதுவும் நடைபெறாத வண்ணம், முறையாக பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா். தொடா்ந்து அவா் கூறுகையில், தமிழக சட்டமன்ற தோ்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. நீலகிாி மாவட்டத்தில் இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. தேர்தல் நாளான்று பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் ஆகியவற்றில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

  நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் 83 மண்டல அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று (நேற்று) இரவிற்குள் இப்பணிகளை முடித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நாளை (இன்று) கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னம் பொருத்தப்பட உள்ளது. இதேபோல் வாக்குபதிவிற்கு தேவையான பொருட்களும் தயாா் நிலையில் உள்ளன, என்றாா். இதில் ஊட்டி சார் ஆட்சியர்கள் மோனிகா ரானா, ரஞ்சித் சிங் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி