×

நீலகிரி மாவட்டத்தில் ரூ.2.13 கோடி பறிமுதல்

ஊட்டி, மார்ச் 31: நீலகிரி மாவட்டத்தில் நேற்று வரை உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.2 கோடியே 13 லட்சத்து 53 ஆயிரத்து 780 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கடந்த மாதம் 26ம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பாிசு பொருட்களை பொதுமக்களுக்கு விநிேயாகம் செய்வதை தடுத்திடும் வகையில் மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 9 பறக்கும் படை என மொத்தம் 27 குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 26ம் தேதியில் இருந்து ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டுச் சென்றவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதில், கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட தணிக்கையில் ரூ.99 லட்சத்து 5 ஆயிரத்து 920 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊட்டி தொகுதியில் ரூ.50 லட்சத்து 11 ஆயிரத்து 40ம், குன்னூர் தொகுதியில் ரூ.59 லட்சத்து 36 ஆயிரத்து 820ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.2 கோடியே 13 லட்சத்து 53 ஆயிரத்து 780 பறிமுதல் செய்யப்பட்டள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட நபர்கள் உரிய ஆவணங்கள் காண்பித்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது வரை மாவட்டத்தில் 141 பேருக்கு ரூ.1 கோடியே 84 லட்சத்து 27 ஆயிரத்து 618 மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags : Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...