கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனுக்கு ஆதரவாக இளைஞரணியினர் வாக்கு சேகரிப்பு

கோவை, மார்ச் 31:  கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் நேற்று எட்டிமடை, நவக்கரை, சின்னியபாதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உதய சூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், ‘‘திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி. திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் மக்களின் குறைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நான் கிணத்துக்கடவு மக்களின் நன்மைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளேன். குறிச்சி நகர் மன்ற தலைவராக 2 முறை இருந்துள்ளேன். தொகுதியை நன்கு அறிந்தவன்’’ என்றார். கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜ சோழன் தலைமையில் ஜீவிதா, வேட்பாளார் குறிச்சி பிரபாகரன் தங்கை சத்யா, மாலதி இளங்கோவன், ரேவதி மோகன்குமார், ரேவதி சிவக்குமார், மோகன்தாஸ், செந்தில் மற்றும் 100க்கும் மேற்பட்ட  இளைஞரணியினர் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு 96வது வார்டுக்குட்பட்ட முருகா நகர், பாலாஜி நகர், ஆண்டாள் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் குறிச்சி பிரபாகரனுக்கு ஆதரவாக வாக்கு  சேகரித்தார்கள்.  இந்நிகழ்வுகளில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, ஒன்றிய செயலாளர் ஈபி. ராஜேந்திரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: