வெளிநாட்டில் 5 ஆண்டுகள் பணியாற்றி தாயகம் திரும்புவோருக்கு மாத ஓய்வூதியம் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது அபுபக்கர் உறுதி

கடையநல்லூர், மார்ச் 31: வெளிநாட்டில் 5 ஆண்டுகள் பணியாற்றி தாயகம் திரும்புவோருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப் பாடுபடுவேன் என தேர்தல் பிரசாரத்தில் இந்திய யூனியன் முஸலிம் லீக் வேட்பாளர் முகமது அபுபக்கர் உறுதி அளித்தார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் கடையநல்லூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மீண்டும் போட்டியிடும் முகமது அபுபக்கர் எம்எல்ஏ கடையநல்லூர் ஒன்றியம் கொடிக்குறிச்சி, சிவராமபேட்டை, நயினாரகரம், இடைகால், பண்பொழி பேரூராட்சி, தேன்பொத்தை ஊராட்சி, செங்கோட்டை நகராட்சி பகுதிகளில் ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில் ‘‘கடையநல்லூர் ஒன்றிய பகுதிகளில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2.80 கோடி, பண்பொழி பேரூராட்சி பகுதியில் ரூ56.80 லட்சம்,  செங்கோட்டை நகராட்சிப் பகுதியில் ரூ.92.30 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றி உள்ளேன். வெளிநாட்டில் 5 ஆண்டுகள் பணியாற்றி தாயகம் திரும்புவோருக்கு ஓய்வூதியம் வழங்க பாடுபடுவேன். செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைபிரிவு அமைக்கப்படும். கடையநல்லூர் அரசு மருத்துவமனை மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். செங்கோட்டை காமராஜர் திருமண மண்டப வளாகத்தில் புதிய வளாகம் உருவாக்கப்படும்’’ என்றார்.

பிரசாரத்தில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரை, தொகுதி பொறுப்பாளர் அப்துல் காதர், பொறுப்புக்குழு சேக்தாவூது, ஒன்றியச் செயலாளர் ராமையா, பண்பொழி பேரூர் செயலாளர் ராஜராஜன், ஜபருல்லாகான், இன்பராஜ், முத்துவேல், ஊராட்சி செயலாளர்கள் தோப்பையா, பண்டாரசாமி, பகவதி, குத்தாலிங்கம், கருப்பசாமி, குருசாமி, இடைகால் சி.எம்.குமார், மாரியப்பன், பீர்பாய், முத்துராமலிங்கம், முத்து ராமானுஜம், ஜெயபால், ஸ்டாலின், செல்லப்பா, செங்கோட்டை நகரச் செயலாளர் ரஹீம், சுரேஷ், சுதாகர், தினேஷ், தங்கம், ஜெயசீலன், ஐவேந்திரன், காங்கிரஸ் சட்டநாதன், வேலுச்சாமி, மதிமுக செல்வ சக்திவேல், மார்க்சிஸ்ட் வேலுமயில், இந்திய கம்யூனிஸ்ட் சுப்பையா, முஸ்லிம் லீக் செய்யது சுலைமான், முகம்மது அலி, கடாபி, நவாஸ்கான், மீரான், அலி,  பார்வார்டு பிளாக் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

>