நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரசாரம் தாமரை மலர்ந்தால் தமிழகம் வளரும் நெல்லையில் நடிகை நமீதா பேச்சு

நெல்லை, மார்ச் 31: நெல்லை  தொகுதி பாஜ வேட்பாளர் நயினார்  நாகேந்திரனை ஆதரித்து   டவுன் ெதற்கு ரதவீதி,  பேட்டை பகுதிகளில் நடிகை நமீதா பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், நீங்கள் தாமரையை வெற்றி பெறச் செய்தால் தமிழகம் வளரும். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரும். நெல்லையில் அரசு கல்லூரி அமைக்க நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்’’ என்றார். பிரசாரத்தில் பாஜ பொதுச்செயலாளர் கணேசமூர்த்தி, மண்டல செயலாளர் ஆனந்தராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

முன்னதாக நயினார் நாகேந்திரனை ஆதரித்து தச்சநல்லூர் பகுதியில் சந்திமறித்தம்மன் கோயில் பகுதி,  மங்களாகுடியிருப்பு, சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோயில் தெரு,  சேந்திமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா  தலைமையில் பகுதி செயலாளர்கள் மாதவன், மோகன் ஆகியோர் தாமரை சின்னத்துக்கு  வாக்குகள் சேகரித்தனர். இதில் அதிமுக வழக்கறிஞர்கள்  ராஜேஸ்வரன், வெங்கடேஷ், பேச்சாளர்கள் காந்திமதிநாதன், முருகன், பாமக  மாவட்ட செயலாளர் சியோன் தங்கராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் அன்பழகன்,  இளைஞரணி மாநில துணை தலைவர் அந்தோணிராஜ், தமமுக மாவட்ட தலைவர் கண்மணி  மாவீரன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>