மன்னார்குடி தொகுதியில் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் கிடைத்திட நடவடிக்கை: திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா வாக்குறுதி

மன்னார்குடி, மார்ச். 31: மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா எளவனூரிலிருந்து நேற்று பிரசாரத்தை துவக்கினார். கோட்டூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பாலையக்கோட்டை, பரசபுரம், தென்பரை மேலக்காடு, வல்லூர், ராதாநரசிம்மபுரம், தென்பரை, குறிச்சி உள்ளிட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்பாளர் டிஆர்பி ராஜா பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார். அப்போது, வேட்பாளர் டிஆர்பி ராஜா பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தென்பரை பாலையூர் பாலம், வல்லூர் ராஜா தெரு பாலம் உடனடியாக கட்டித்தரப்படும்.

தென்பரையில் கால்நடை மருத்துவமனை அமைத்து தரப்படும். கோவிந்தநத்தம், ராதா நரசிம்மபுரம் உள்ளிட்ட அனைத்து ஊராட்சியிலும் சாலைகள் சீரமைக்கப்படும். கோடையில் நிலவும் குடிநீர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீர் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பிரசாரத்தின்போது, கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தேவதாஸ், மாவட்ட துணைச் செயலாளர் கலைவாணி மோகன் உள்ளிட்ட திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>