பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் காமராஜ் தகவல்

திருவாரூர், மார்ச் 31: நன்னிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் காமராஜ் நேற்று நன்னிலம் ஒன்றியத்தில் பேரளம் பேரூராட்சி, இஞ்சிகுடி, கூத்தனூர், அய்யம்பேட்டை, கடககுடி, மருதுவாஞ்சேரி மற்றும் குடவாசல் ஒன்றியத்தில் நெம்மேலி, குப்பசமுத்திரம், அதம்பார், பல்லவநத்தம், சரபோஜிராஜபுரம், நல்லிச்சேரி, எரவாஞ்சேரி, தேதியூர், மணவாளநல்லூர், மருத்துவக்குடி உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியும் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறார்.

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் மூலம் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த வேலைக்கு செல்லும் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். பெண்களினுடைய சிரமத்தை குறைக்கும் வகையில் இலவச வாஷிங் மெஷின், சூரிய மின்அடுப்பு, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை உள்ளிட்டவைகளை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளார். இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் கேட்டுக்கொண்டார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Related Stories:

>