×

திமுக ஆட்சி அமைந்தவுடன் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் திருவாரூர் வேட்பாளர் பூண்டி கலைவாணன் பிரசாரம்

திருவாரூர், மார்ச் 31: திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டிகலைவாணன் நேற்று திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலை, புலிவலம், வேலங்குடி உட்பட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, திமுக ஆட்சி அமைந்தவுடன் தொகுதியின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் கூறியபடி வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போடப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். மாணவர், மகளிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமத்தொகை வழங்கப்படும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறைக்கப்படும். பால் விலை குறைக்கப்படும். சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும் போன்ற எண்ணற்ற வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும். திருவாரூரில் இசைக்கல்லூரி அமைக்கப்படும். கொரடாச்சேரியில் சோழசூடாமணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்படும். தன்னை உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ஒன்றிய செயலாளர் தேவா மற்றும் கட்சியினர், கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

Tags : Thiruvarur ,Boondi Kalaivanan ,DMK ,
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்