கலெக்டர் துவக்கி வைத்தார் தஞ்சை அரசு கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கல்

தஞ்சை, மார்ச் 31: தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகை, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் 2018-19, 2019-20ம் கல்வியாண்டில் தர வரிசையில் இடம் பெற்ற மாணவர்கள், தேசிய மற்றும் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்கள் என மொத்தம் 52 பேருக்கு கல்லூரி அறக்கட்டளை நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

பல்கலைக்கழக அளவில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.13 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் தரவரிசையில் இடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ.9500 என மொத்தம் ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் கோவிந்தராசு, கல்லூரி தேர்வு நெறியாளர் புகழேந்தி, முன்னாள் மாணவர் சங்க செயலாளர் முனைவர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், உதவி ஒருங்கிணைப்பாளர் முத்துக்குருபாக்கியம், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை பாராட்டினர்.

Related Stories:

>