தஞ்சை மாவட்டத்தில் தேர்தலில் பணியாற்ற விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

தஞ்சை, மார்ச் 31: தேர்தல் பணியாற்ற விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் வரும் ஏப்.4ம் தேதி தஞ்சை ஆயுதப்படை மைதானத்திற்கு நேரில் வருகை தருமாறு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கேட்டுக்கொண்டுள்ளார். வரும் ஏப்.6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக பணியாற்றிட முன்னாள் படைவீரர்கள், சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப், தீயணைப்பு படை ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள், ஓய்வு பெற்ற மத்திய ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

வரும் ஏப்.4ம் தேதி முதல் 7ம் தேதி வரை இப்பணியில் ஈடுபட வேண்டும். இப்பணிக்காக தங்களது பெயர்களை பதிவு செய்த, செய்யாத மேற்காணும் படைப்பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற நபர்கள் வரும் ஏப்.4ம் தேதி காலை 7 மணியளவில் தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு தங்களது படைவிலகு சான்று மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் வருகை தருமாறு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories:

>