கஞ்சா கடத்தல் வழக்கில் கைதானவருக்கு குண்டாஸ்

புதுக்கோட்டை, மார்ச் 31: புதுக்கோட்டை உட்கோட்டம், திருக்கோகர்ணம் காவல் சரகம், அம்பாள்புரத்தை சேர்ந்த ரெத்தினம் மகன் தேவேந்திரன் (38). இவரை கடந்த சில வாரங்களுக்கு முன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். தேவேந்திரனின் தொடர் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ஊமாமகேஸ்வரி உத்தரவின்படி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை திருக்கோகர்ணம் போலீசார் மேற்கொண்டனர்.

Related Stories:

More