×

புதிய தொழில் நுட்பத்தால் அங்கன்வாடி மையங்கள் நவீனப்படுத்தப்படுமா? வேளாண் இணை இயக்குனர் ஆலோசனை

புதுக்கோட்டை, மார்ச் 31: பு துக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அங்கன் வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 வயதுக் குறைவான குழந்தைகள் வந்து துவக்க கல்வி பயின்று செல்வார்கள். அந்த குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படும். இந்த அங்கன் வாடியில் ஒரு மேற்பார்வையாளர் ஒரு சமையலர் பணியில் இருப்பர். அங்கன்வாடி மேற்பார்வையாளர் அந்த பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாவு கொடுப்பது, மேலும் போலியோ தடுப்பூசி போடும் காலங்களில் இவர்களின் பங்கும் அதிகம் இருக்கும். மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான ஆலோசனைகளும் மாதந்தோறும் இங்கு வழங்கப்படுகிறது.

அவர்கள் குறித்த தகல்களை பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளில் போதிய வசதிகள் இல்லாததால் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், ஏபிசிடி, அஆ உள்ளிட்ட ஆரம்ப கல்வி சொல்லி கொடுபத்ற்கு தேவையான உபகரணங்கள் இல்லாமல் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்றுக்கொடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது.

இப்படி பல்வேறு பிரச்னைகளில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது தனியார் துறையில் பல தொழில்நுட்பங்கள் பயன்டுத்தி குழந்தைகளுக்கு கல்வி போதிக்கின்றனர். அங்கன்வாடிகளில் தற்போது உள்ள ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து அதில் அனிமேசன், கார்ட்டூன் படங்கள் மூலம் எளிதில் குழந்தைகளின் விரும்பும் வகையில் விளையாட்டுகள் கற்றுத்தர வேண்டும். இதற்கு தமிழக அரசு அங்கன்வாடிகளை புதிய தொழில்நுட்பத்துடன் நவீனப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அங்கன் வாடி மையங்களுக்கு 5 வயதுக்குள்ளான குழந்தைகள் தான் வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் இருப்பது அவசியம். அப்போதுதான் ஒரு நாளைக்கு வந்த குழந்தை மறுநாள் மறுப்பு தெரிவிக்காமல் அங்கன்வாடிக்கு வந்து செல்லும். ஆனால் மாவட்டத்தில் பல்வேறு அங்கன்வாடிகளில் தேவையான உபகரணங்கள் இன்றி செயல்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. நிலைமை இப்படி இருக்கு அரசு தரப்பில் பல்வேறு பணிகளை அங்கன்வாடி பணியாளர்களுக்கு அவ்வப்போது வழங்கப்படுகிறது.

இதனால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளை கவனிக்க முடியாமல் பணியாளர்கள் தவிக்கின்றனர். அங்கன்வாடிகளில் தற்போது உள்ள ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து அதில் அனிமேசன், கார்ட்டூன் படங்கள் மூலம் எளிதில் குழந்தைகளின் விருப்பும் வகையில் விளையாட்டுகள் கற்றுத்தர வேண்டும். இதற்கு தமிழக அரசு அங்கன்வாடிகளை புதிய தொழில்நுட்பத்துடன் நவீனப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்படி பல்வேறு பிரச்னைகளில் இயங்கி வரும் அங்கன்வாடிகளை மேம்படுத்த தமிழக அரசு தனிதிட்டம் மூலம் செயல்படுத்த முன்வரவேண்டும். தற்போது வசதி படைத்தவர்கள் தனியார் பள்ளிக்கு அழைத்து சென்று எல்கேஜி, யூகேஜி என சேர்த்து விடுகின்றனர். ஆனால் வசதி இல்லாதவர்கள் தங்கள் குழந்தைகள் கல்வி சம்பந்தமாக ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணத்தில் அங்கன்வாடிக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்றனர்.

Tags : Anganwadi Centers ,Associate Director ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியத்தில் ரூ.36...