திருமயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வைரமுத்துவிற்கு எதிராக களம் இறங்கிய சுயேட்சை அதிர்ச்சியில் ஆளும் கட்சி நிர்வாகிகள்

திருமயம், மார்ச் 31: திருமயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வைரமுத்துவிற்கு எதிராக சுயேட்சை வேட்பாளர் களம் இறங்கிய காரணத்தால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் தொகுதியில் அதிமுக சார்பில் வைரமுத்து போட்டியிடுகிறார். தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் வைரமுத்துவை கண்டிப்பாக தோல்வி அடைய செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினர் முடிவு செய்து, சுயேட்சை வேட்பாளர் ஒருவரை களம் இறக்கி உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே திருமயம் தொகுதியில் அதிமுக சார்பில் அந்த பகுதியில் பெரும்பான்மையாக உள்ள சமூசகத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டது.

ஆனால் இதை கண்டுகொள்ளாத அதிமுக வைரமுத்துவை வேட்பாளராக அறிவித்தது. இதனால் கோபம் அடைந்த அந்த சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் வைரமுத்துவிற்கு எதிராக தங்கள் சமுதாயம் சார்பில் சுயேட்சை வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்தனர். இதன்படி பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை வேட்பாளராக அறிவித்து பிரசாரத்தை தொடங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த வைரமுத்து தரப்பு அந்த வேட்பாளரை பின்வாங்க வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்த முயற்சிகள் அனைத்து தோல்வி அடைந்த காரணத்தால் அந்த இளைஞர் பெயரை கொண்ட பலரை சுயேட்சை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது. இந்த செயல் பெரும்பான்மை மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதிமுக வேட்பாளர் வைரமுத்து தோற்கடிக்க வேண்டும் என்று பெரும்பான்மை சமூகத்தினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக பெரும்பான்மை சமூகத்தின் வாங்கி வங்கியை கொண்டு வெற்றி பெற்று வந்த அதிமுக, இந்த சட்டமன்ற ேதர்தலில் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக செயல்பட்டு வருவது அந்த சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுகவிற்கு எதிராக தாங்கள் சார்ந்த சமூதாய மக்களை ஒன்றிணைத்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர். மேலும் திருமயம் தொகுதியில் தங்கள் சமூதாய பலத்தை நிருபிக்க என்றும் முடிவு செய்துள்ளனர். இதில் ஆளும் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>